search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை தபாலில் அனுப்புவதை தவிர்க்க வேண்டுகோள்

    ஆதார் கார்டு அறிமுகமான நேரத்தில் தபால்துறை வாயிலாக ஆதார் அட்டைகள் வந்து சேர்வது பெரும்பாடாக இருந்தது.
    திருப்பூர்:

    ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

    திருப்பூரில் பல்வேறு மாவட்ட மக்களும் வாழ்கின்றனர். திருப்பூர் வந்து சேரும் குடும்பத்தினர், தொழில் நிமித்தமாக அடிக்கடி குடிபெயர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம். ஒரு சிலர், நீண்ட நாட்களாக ஒரே வீதியில் வசித்து வருகின்றனர். 

    திருப்பூரை பொறுத்தவரை, தபால் மூலம் தகவல் பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆதார் கார்டு  அறிமுகமான நேரத்தில் தபால்துறை வாயிலாக ஆதார் அட்டை கள் வந்து சேர்வது பெரும்பாடாக இருந்தது. ஆதார் கார்டு கேட்டு தினமும் அஞ்சலகங்களுக்கு அலைபாய்ந்து கொண்டிருந்தனர். அதே நிலை மீண்டும் வரக்கூடாது என்கின்றனர் பொதுமக்கள்.

    இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறியதாவது: 

    திருப்பூரை பொறுத்தவரை பொதுமக்கள் நகர்ந்து கொண்டே இருப்பார்கள். 

    அடிக்கடி முகவரி மாறுவதால் 3 தொகுதிகளில், வாக்காளராக பதிவு செய்திருப்பார்கள். அப்படி இருக்கும் போது புதிய ரேஷன் கார்டுகளை தபால் மூலம் அனுப்பி வைப்பது சரியாக இருக்காது.

    சென்னையில் அச்சாகி வரும் கார்டுகளை வருவாய் துறையினர் தாலுகா அலுவலகம் அல்லது ரேஷன் கடை மூலம் வழங்குகின்றனர். தபாலில் அனுப்பினால் கைக்கு கிடைக்காமல் போகவும் வாய்ப்புள்ளது. 

    நகல் கார்டுகள், மாவட்ட அளவிலேயே பிரின்ட் செய்யப்படுகிறது.’ஸ்மார்ட்’ ரேஷன் கார்டு என்பது குடும்பத்துக்கான ஆவணம். எனவே, பாதுகாப்பாக, வருவாய்த்துறை மூலமாகவே வழங்கப்பட வேண்டும். 

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×