என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணியை சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய்பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சம்பந்தப்பட்டவர்களே பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்
சம்பந்தப்பட்டவர்களே பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச நாள் விழா நடந்தது. முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா தலைமை தாங்கி சமரசம் தொடர்பான விளம்பர பலகை திறந்து வைத்தார்.
சமரச விழிப்புணர்வு தொடர்பான ஒளி, ஒலி பதிவினை வெளியிட்டும், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் தன்னர்வலர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் முதன்மை மாவட்ட நீதிபதிசுமதி சாய் பிரியா பேசுகையில், முன்னர் கூட்டுக்குடும்பமாக இருந்த போது கட்டுப்பாடுகளுடன் இருந்தோம். நமக்குள்ள பிரச்சினைகளை நாமே தீர்வு கண்டோம். இன்றைய சூழ்நிலையில் தனி, தனியாக இருப்பதால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இயலாமல் நீதிமன்றத்திற்கு வழக்குகள் வருகிறது.
சமரச மைத்தில் சம்பந்தப்பட்டவர்களே பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். பயிற்சி பெற்ற சமரசர்கள் இருதரப்பினரையும் அழைத்து பேசி பிரச்சினை-களுக்கு ஆலோசனை வழங்கி தீர்வு காண வழிவகை செய்கின்றனர் என்றார்.
இந்த பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், சமூக நலத்துறை பணியாளர்கள் மற்றும் தொண்டு நிறுவன தன்னர்வலர்கள் கலந்து கொண்டனர்.
காவல் துறையை சார்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆலோசனை நடமாடும் வாகனம் மூலம் சமரசம் தொடர்பான விழிப்புணர்வு விளம்பரம் ஒளிபரப்பப்பட்டது.
இந்த பேரணி ஒருங்-கிணைந்த நீதிமன்றத்தில் இருந்து திருப்பத்தூர் சாலை வழியாக போக்சோ நீதிமன்றம் வரை நடைபெற்று நீதிமன்ற வளாகத்தில் முடிவு-பெற்றது. சார்பு நீதிபதி பரமேஸ்வரி நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், மகிளா நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ், போக்சோ நீதிபதி பாபுலால், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுசார்பு நீதிபதி செயலாளர் பரமேஸ்வரி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சுதாகர், சிறப்பு நீதிபதி உதயவேலவன், மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், கூடுதல் மகிளா நீதிபதி பாரத தேவி மற்றும் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






