என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    சென்னையில் இருந்து கோவைக்கு மோட்டார் சைக்கிளில் ஆண் நண்பருடன் வந்த இளம்பெண் விபத்தில் பலி

    சென்னையில் இருந்து கோவைக்கு மோட்டார் சைக்கிளில் ஆண் நண்பருடன் வந்த இளம்பெண் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சித்தோடு:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம் இவரது மகன் விஜய் (24). இவர் சென்னை ஒரகடம் பகுயில் உள்ள ஒரு தனியார் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    அதே கம்பெனியில் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் பவித்ரா (23) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இவர்கள் நண்பர்களாக பழகி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு விஜய் கோவையில் உள்ள தனது அக்காவை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து கோவைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவருடன் பவித்ராவும் உடன் வந்தார். விடிய, விடிய மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்ததால் விஜய் தூக்கக் கலக்கத்தில் இருந்தார்.

    இன்று அதிகாலை 4 மணி அளவில் ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த ஆட்டையாம்பாளையம் பகுதியில் கோவை-சேலம் பைபாஸ் ரோட்டில் அவர்கள் வந்து கொண்டு இருந்தனர். அப்போது தூக்கக் கலக்கத்தில் இருந்த விஜய் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ரோட்டின் மையப்பகுதியில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்தானது.

    இதில் படுகாயமடைந்த பவித்ரா சம்பவ இடத்திலேயே பலியானார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த விஜய் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது பற்றி தெரிய வந்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான பவித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கா ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் காயமடைந்த விஜயையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து பலியான பவித்ராவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    Next Story
    ×