என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமரச தீர்வு மையத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி
    X
    சமரச தீர்வு மையத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி

    கடலூரில் இன்று சமரச தீர்வு மையத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி

    தமிழ்நாடு சமரச தீர்வு மையத்தின் உத்தரவின்படி சமரச விழிப்புணர்வு நாளாக இன்று (9-ந் தேதி) கொண்டாடும் விதமாக கடலூர் மாவட்ட சமரச தீர்வு மையத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    கடலூர்:

    சென்னை உயர்நீதிமன்ற தமிழ்நாடு சமரச தீர்வு மையத்தின் உத்தரவின்படி சமரச விழிப்புணர்வு நாளாக இன்று (9-ந் தேதி) கொண்டாடும் விதமாக கடலூர் மாவட்ட சமரச தீர்வு மையத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி செந்தில் குமார் தலைமை தாங்கி மாவட்ட சமரச தீர்வு மையத்தில் முன்பாக நெகிழி பலகையை திறந்து வைத்தார்.

    தொழிலாளர் நல நீதிமன்றம் தலைவர், நிரந்தர மக்கள் நீதிமன்றம் ( பொறுப்பு ) சுபா அன்புமணி, குடும்ப நல நீதிபதி புவனேஸ்வரி, போக்சோ நீதிமன்ற நீதிபதி எழிலரசி, மகிளா நீதிமன்ற நீதிபதி பால கிருஷ்ணன், எஸ்.சி. எஸ்.டி நீதிமன்ற நீதிபதி உத்தமராஜ் , தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரபாகர், முதன்மை சார்பு நீதிபதி பஷீர், கூடுதல் சார்பு நீதிபதி மோகன்ராஜ், சிறப்பு சார்பு நீதிபதி ( நில எடுப்பு ) ஜெனிபர், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்- 1 , சிவபழனி, குற்றவியல் நிதித்துறை நடுவர் எண்-2 ஆர்த்தி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்- 3 ரகோத்தமன், கூடுதல் மகிளா நிதித்துறை நடுவர் சுரேஷ் பாபு, மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்கள், புதுச்சேரி சட்ட கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் கந்தசாமி நாயுடு கல்லூரியின் நாட்டு நல பணித்திட்ட மாணவ-மாணவிகள் செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவ-மாணவிகள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் சமரசர்கள் ஆகியோர் விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரத்தை வழங்கினார்கள். 

    இப்பேரணி கடலூர் டவுன்ஹாலில் இருந்து தொடங்கி கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் வரை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் சமூக நல அலுவலர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்வு கடலூர் மாவட்ட சமரச தீர்வு மையத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

    Next Story
    ×