என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பவானி சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த் திருவிழா

    கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    பவானி:

    கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறும். ஆனால் கொரோனா பரவல் காரண மாக கடந்த 2 ஆண்டுகளாக விழா நடைபெறாமல் இருந்தது.

    தற்போது ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இனால் பவானி சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதையொட்டி கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் நேற்று சித்திரை தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி  நந்தி உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளை நிற கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து பிரகாரத்தை சுற்றி கொண்டு வரப்பட்டு கோவில் முன்பு கொடி ஏற்றப்பட்டது.

    விழாவையொட்டி இன்று சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஆதி கேசவ பெருமாள் கோவிலில் கொடி ஏற்றப்படுகிறது. முன்னதாக இன்று காலை சங்கமேஸ்வரருக்கு அபி ஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    இதையொட்டி 12-ந் தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு மற்றும் 63 நாயன்மார்கள் புறப்பாடு நடக்கிறது. வரும் 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை ஆதிகேசவ பெருமாள்  தேர் திருவிழாவும், 16-ந் தேதி சங்கமேஸ்வரர்   தேர் திருவிழாவும் நடக்கிறது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள்.

    வரும் 17-ந் தேதி மாலை பரிவேட்டை நிகழ்ச்சியும், சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும், 18-ந் தேதி தீர்த்தவாரியும், 19-ந் தேதி நடராஜர் தரிசனம், மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.
    Next Story
    ×