என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    பண்ருட்டியில் ஜவுளிகடையில் திருடிய பெண் கைது

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஜவுளிகடையில் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி பஸ் நிலையம் பின்புறம் பஸ் வெளியே வரும் வழியில் இந்திரா காந்தி சாலையில் பிரபல ஜவுளிக்கடை உள்ளது. இங்கு நேற்று ஜவுளி எடுப்பது போல் நடித்து ஜவுளி திருடிய பெண் ஒருவரை கடையிலுள்ள சி.சி.டி.வி., கேமராவில் கடையின் உரிமையாளர் பார்த்து விட்டார்.

    கையும் களவுமாக பிடிபட்ட அந்த பெண்ணை பண்ருட்டி போலீசில் ஒப்படைத்தனர். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் ஆகியோர் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். பின்னர் அந்த பெண் குள்ளஞ்சாவடியை சேர்ந்த தமிழ் (வயது 55) என்று தெரியவந்தது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×