search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆன்லைன் விளையாட்டு
    X
    ஆன்லைன் விளையாட்டு

    கோவையில் பப்ஜி விளையாடியதை கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் மாயம்

    கோவையில் பப்ஜி விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் மாயமான பிளஸ்-2 மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    கோவை:

    கோவை காட்டூர் செல்லப்பன் வீதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் பஸ்வான். இவரது மகன் பல ராம்குமார் (வயது 17). இவர் ஆர்.எஸ். புரத்தில் அரசு பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார்.

    கொரோனா பரவல் காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக பாடம் படிப்பதற்காக பலராம்குமாருக்கு அவரது பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்து இருந்தனர். தற்போது பரவல் குறைவதால் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் பலராம்குமார் பள்ளி பாடங்களை சரியாக படிக்காமல் நண்பர்களுடன் சேர்ந்து செல்போனில் அடிக்கடி பப்ஜி விளையாடிக் கொண்டிருந்தார். இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று பலராம்குமார் தனது நண்பர்களுடன் செல்போன் மூலமாக பப்ஜி விளையாடி கொண்டிருந்தார். இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த அவர் தனது பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை.

    இதுகுறித்து பலராம்குமாரின் பெற்றோர் மாயமான தங்களது மகனை கண்டுபிடித்து தரும்படி காட்டூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பிளஸ் 2 மாணவரை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×