search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமாரிடம் என்.ஆர். இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் மனு அளித்த
    X
    குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமாரிடம் என்.ஆர். இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் மனு அளித்த

    ரேசன் அட்டை குளறுபடிகளை போக்க சிறப்பு முகாம் என்.ஆர்.இலக்கிய பேரவை வலியுறுத்தல்

    ரேசன் அட்டைகளில் குளறுபடிகளை போக்க திருபுவனை தொகுதியில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என என்.ஆர்.இலக்கிய பேரவை வலியுறுத்தியுள்ளது.
    புதுச்சேரி:

    என்.ஆர்.இலக்கிய பேரவை தலைவர் தன சேகரன் புதுவை குடிமைப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமாரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    வறுமை கோட்டில் வாழும் மக்களுக்கு அட்சய பாத்திரமாக இருந்து வந்தது அரசின் ரேசன் கடைகள் மட்டுமே. கடந்த கால காங்கிரஸ் ஆட்சியின் தவறான கொள்கை முடிவால் அவை மூடுவிழா கண்டது. 

    அதனை தொடர்ந்து கொரோனா பெரும் தொற்றால் முற்றிலுமாய் முடங்கியது. தற்போதைய கூட்டணி ஆட்சியில் தாங்கள் குடிமைப்பொருள் வழங்கல் துறைக்கு பொறுப்பேற்ற பிறகுதான் பல்வேறு ஆலோசனைக்கு பின் ரேசன் கடைகள் உயிர்ப்பித்து வருவதை பார்க்க முடிகிறது. இதை என்.ஆர்.இலக்கிய பேரவை வரவேற்கிறது.

    திருபுவனை தொகுதி தொழிற் சாலைகள் நிறைந்த பகுதி யாகும். மக்களின் அன்றாட வாழ்வாதாரம் இத்தகைய தொழிற்சாலைகளை நம்பியே உள்ளது. 

    இதனால் தங்கள் துறையினர் மூலம் நடைமுறைப்படுத்தும் அறிவிப்புகள் மக்களை சென்ற டைய காலதாமதமாகிறது. ரேசன் அட்டையில் பிரித்தல், நீக்குதல், சேர்த்தல் மற்றும் வங்கி கணக்கு எண் மாற்றம், புதிய ரேசன் அட்டை விண்ணப்பித்தல் போன்ற  பல்வேறு பிரச்சினைக ளோடுதான் ரேசன்அட்டை தாரர் கள் இன்று வரையிலும் இருந்து வருகிறார்கள்.

    இத்தகையை நிலையை பயன்படுத்தி இடைத்தரகர்கள் மக்களிடம் ரேசன் அட்டையை மாற்றி தருவதாக பொய்யான உறுதி மொழி கொடுத்து பணம் பறித்து வருகிறார்கள். இதை தடுத்து நிறுத்தும் விதமாகவும், மக்களின் ரேசன் அட்டையில் உள்ள பிரச்சினைக்கு தீர்வு காண திருபுவனை தொகுதியில் 2 நாள் சிறப்பு முகாம் நடத்தி மக்களின் குறைகளை தீர்க்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×