என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
மத்தூர் அருகே பாலம் அடியில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே பாலம் அடியில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பாலத்தின் அடியில் இருந்து இளைஞர்களுக்கு கஞ்சா விற்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் கவுண்டப்பனூர் பகுதியை சேர்ந்தவர் சாம்ராஜ் மகன் தமிழ்செல்வன் (வயது21) என்பது தெரியவந்தது. அவர் திருப்பத்தூரில் இருந்து கஞ்சா பொட்டலங்கள் வாங்கி மத்தூர் பகுதியில் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனால் அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை போலீ சார் பறிமுதல் செய்தனர். கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
Next Story






