என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
கிருஷ்ணகிரியில் கண், உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு
கிருஷ்ணகிரியில் கண், உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் கண் தானம், ரத்த தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி நகர அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் சுரேஷ் கலந்து கொண்டார்.
விழிப்புணர்வு ஊர்வலத்தில் கிருஷ்ணகிரி ரவுண்டானா 5 ரோடு பகுதியில் தொடங்கி காந்திசாலையில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வரை சென்று நிறைவடைந்தது. விழிப்புணர்வு பேரணியில் கண் தானம், ரத்த தானம், உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய் யப்பட்டது.
முடிவில் 6 பேர் தங்களது முழு உடலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக அளித்தனர்.
Next Story






