என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேவதுர்கையம்மன் கோவிலில் சிறப்பு மிளகாய் யாகம்
    X
    தேவதுர்கையம்மன் கோவிலில் சிறப்பு மிளகாய் யாகம்

    தேவதுர்கை அம்மன் கோவிலில் மிளகாய் யாகம்

    கீழ்வேளூர் அருகே தேவூர் தேவதுர்கை அம்மன் கோவிலில் மிளகாய் யாகம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுரை அடுத்த தேவூர் தேவதுர்கையம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு மிளகாய் யாகம் நடைபெற்றது. உலக அமைதி, விவசாயம் செழிக்க, தோஷங்கள் நீங்க வேண்டி வேதவிற்பனர்கள் வேத மந்திரங்களை ஓதி யாககுண்டத்தில் மிளகாய் மற்றும் 108 மூலிகை பொருட்கள் மற்றும் காய்கள், பழங்கள், கொண்டு ஹோமம் நடைபெற்றது.

    நிறைவாக யாகம் பூர்ணாஹீதியுடன் முடிவடைந்தது. பின்னர் ஹோமத்தில் பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை ஏந்திய சிவாச்சாரியார் வலம் வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மகாதீபாராதனை நடைபெற்றது.
    Next Story
    ×