என் மலர்
உள்ளூர் செய்திகள்

நூல்
திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு ரூ.30 உயர்வு- ஆடை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி
திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு ரூ.30 உயர்த்தி நூற்பாலைகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இதனால் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும். தொழில் துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்ற படி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள்.
நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி நூல் விலை உயர்ந்து வருகிறது. எனவே நூல் விலையை குறைக்க வலியுறுத்தி போராட்டமும் திருப்பூரில் நடந்தது. கடந்த மாதம் நூல் விலையில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான(ஏப்ரல்) நூல் விலையை நூற்பாலைகள் வெளியிட்டன. இதில் நூல் விலை கிலோவுக்கு ரூ.30 உயர்த்தி நூற்பாலைகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இதனால் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதன்படி ஒரு கிலோ 20வது நம்பர் கோம்டு நூல் ரூ.363க்கும், 24ம் நம்பர் ரூ.375க்கும், 30ம் நம்பர் ரூ.385க்கும், 34ம் நம்பர் ரூ.405க்கும், 40ம் நம்பர் ரூ.425க்கும், 20ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.355க்கும், 24ம் நம்பர் 365க்கும், 30ம் நம்பர் ரூ.375க்கும், 34ம் நம்பர் ரூ.395க்கும், 40ம் நம்பர் ரூ.415க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story