search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பந்தயத்தை கலெக்டர் முரளிதரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    X
    பந்தயத்தை கலெக்டர் முரளிதரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தேனியில் மாணவர்களுக்கான மாரத்தான் ஓட்டப்பந்தயம்

    தேனியில் மாணவர்களுக்கான மாரத்தான் பந்தயத்தை கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்தார்.
    தேனி:

    கண்காட்சியில் இந்திய விடுதலைக்காக பாடுபட்ட தேசத் தலைவர்களை போற்றும் வகையில், “விடுதலைப் போரில் தமிழகம்” என்ற தலைப்பில் தேனி மாவட்டம் உள்பட பல்வேறு சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.

    மேலும், இதில் தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சித்துறை, காவல் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத்துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

    கடந்த 27ம் தேதி தொடங்கிய கண்காட்சி 2ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    இதனையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட  மாரத்தான் ஓட்டம் விழாத்திடலிலிருந்து மாவட்ட விளையாட்டு மைதானம் வரை நடைபெற்றது.

    மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே சுதந்திர போராட்ட வரலாறு குறித்து மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு 2ம் தேதி அன்று நிறைவு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. ஒரு வார காலம் நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

    எனவே, இந்திய விடுதலைக்காக பாடுபட்ட தேசத் தலைவர்களை போற்றும் வகையில் ஒரு வார காலம் நடைபெறவுள்ள 75வது ”சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா” பல்துறை பணி விளக்க கண்காட்சியில் இடம் பெற்றுள்ள  சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் பார்வையிட்டு பயனடைய வேண்டும் என மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்தார்.
    Next Story
    ×