என் மலர்
உள்ளூர் செய்திகள்

அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு
ஊட்டியில் தொழிலாளர்களுக்காக கட்டப்பட்ட வீடுகள்- அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு
வீடுகளை ஆய்வு செய்த அமைச்சர் அது குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
ஊட்டி:
பந்தலூரை அடுத்த காரக்கொல்லி கிராமத்தில் தொழிலாளர்களுக்காக கட்டப்பட்ட வீடுகளை சிறுபான்மை நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் சேரங்கோடு ஊராட்சியில் உள்ள காரக்கொல்லி கிராமத்தில் தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்து ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்காக ரூ.3 கோடி மதிப்பீட்டில் 70 வீடுகளை தமிழக அரசு கட்டியுள்ளது.
இந்நிலையில், வீடுகளை ஆய்வு செய்த அமைச்சர் அது குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது, ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் குமாரமங்கலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






