என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
ஈரோடு மாவட்டத்தில் அதிரடி வேட்டை- கஞ்சா, போதை பொருள் விற்ற 10 பேர் கைது
ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா, போதை பொருள் விற்ற 10 பேரை கைது செய்த போலீசார், மாவட்டம் முழுவதும் இன்று 2-வது நாளாக கஞ்சா வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு:
தமிழகத்தில் போதைப்பொருட்களை முழுமையாக ஒழிக்க போலீஸ் சார்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர், ஜனவரி மாதங்களில் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டது.
இந்நிலையில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை என்ற பெயரில் நேற்று முதல் ஒரு மாதம் கஞ்சா வேட்டைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், ஐ.ஜி,க்கள், டி.ஐ.ஜி.க்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் கடந்த டிசம்பர் 2021 முதல் ஜனவரி 2022 இதுவரை நடத்தப்பட்ட கஞ்சா வேட்டையின் தொடர்ச்சியாக இந்த மாதம் நேற்று முதல் வரும் ஏப்ரல் மாதம் 27-ந் தேதி வரை ஒரு மாதம் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 நடத்தப்பட வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதையடுத்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா, போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை குறித்து ஒவ்வொரு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் அந்தந்த போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முதல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி ஈரோடு சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் விஜயா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 இருசக்கர வாகனத்தில் 3 நபர்கள் வந்தனர்.
அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் இருந்து அரை கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் அவர்கள் ஈரோடு பெரிய தோட்டம் பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்கிற தக்காளி விக்கி (26), நாடார்மேடு பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் (20), சாஸ்திரி நகரை சேர்ந்த விக்னேஷ் குமார் (24) ஆகியோர் என தெரியவந்தது.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரை கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.4,750 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் விஜயமங்கலம், கள்ளியம்புதூர் பகுதியில் டாஸ்மாக் கடை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் விஜயமங்கலம் பகுதியை சேர்ந்த வரதராஜ், தமிழ்செல்வன் என தெரியவந்தது. அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
தாளவாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒருவரை சோதனை செய்தபோது அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், குட்கா பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர் தாளவாடி அடுத்த ஜிகினாரைய் அப்பகுதியை சேர்ந்த சின்னகாதி என தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யபட்டார்.
இதேபோல் டி.என்.பாளையம் சத்தியமங்கலம்- அத்தாணி சாலையில் வாணிபுதூர் பாலம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் பங்களாபுதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ராஜ்குமார், ஆனந்த்பாபு என்பதும் ஒரு கிலோ கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
இதேபோல் பவானி பஸ் நிலையம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த ஒருவரைப் போலீசார் நிறுத்தி சோதனை செய்தபோது அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர் சந்திரசேகரன் என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீசார் இன்று 2-வது நாளாக கஞ்சா வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story