search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நன்செய் இடையார் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர் ஒருவர் தீ மிதித்த போது எடுத்த படம்.
    X
    நன்செய் இடையார் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர் ஒருவர் தீ மிதித்த போது எடுத்த படம்.

    மகாமாரியம்மன் கோவிலில் பூ மிதித்தல், பூவாரிபோடும் நிகழ்ச்சி

    நன்செய் இடையார் மகாமாரியம்மன் கோவிலில் பூ மிதித்தல், பூவாரிபோடும் நிகழ்ச்சி நடந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பிரசித்தி பெற்ற நன்செய் இடையார் மகா மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொருவருடமும் பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 13-ந் தேதி கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.

    20-ந் தேதி மறு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 13-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை பக்தர்கள் தினந்தோறும் கோவில் முன்பு நடப்பட்டிருந்த கம்பத்திற்கும், அம்மனுக்கும் புனித நீர் மற்றும் பால் ஊற்றி வழிபட்டனர். 27-ந் தேதி இரவு வடிசோறு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேற்று தீ மிதி விழாவை முன்னிட்டு தமிழகத்திலேயே மிக நீளமானதாக கூறப்படும் சுமார் 63 அடி நீளமுள்ள பூக்குண்டத்தில் சென்னை, கோவை, கரூர், திருச்சி, சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல்  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண் பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

    மேலும் ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு பூ போட்டு (பெண்களின் தலையில் நெருப்பு) தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதில் அம்மன் வெண்ணை காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    அதனை தொடர்ந்து இரவு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று செவ்வாய்க்கிழமைகாலை கிடா வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.மாலை பொங்கல் மாவிளக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது.30-ஆம் தேதி காலை கம்பம் ஆற்றில் விடுதலும், மஞ்சள் நீராடல் விழாவும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவில் எட்டுபட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் தர்மகர்தாக்கள் செய்துள்ளனர்.

    Next Story
    ×