என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    பஸ் டிரைவரை ஆபாசமாக திட்டிய 2 பேர் மீது வழக்கு

    மேச்சேரி அருகே பஸ் டிரைவரை ஆபாசமாக திட்டிய 2 பேர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
    மேட்டூர்:

    மேட்டூரில் இருந்து சேலம் நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை டிரைவர் முனுசாமி என்பவர்  ஓட்டி சென்றார். மேச்சேரி அருகே உள்ள எம்.காளிப்பட்டி என்ற இடத்தில் பஸ் சென்றபோது  மோட்டார்சைக்கிளில் வந்த மேச்சேரி சேர்ந்த கோபால் (வயது 48), சுந்தர்ராஜன் (38) ஆகியோர் பஸ்சை வழிமறித்தனர்.

    பின்னர்  இருவரும், டிரைவர் முனுசாமியை பார்த்து பஸ்சை ஒழுங்காக ஓட்டமாட்டாயா என கூறி ஆபாசமாக திட்டிவிட்டு சென்றனர். இதுகுறித்து டிரைவர் முனுசாமி மேச்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி கோபால், சுந்தர்ராஜன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.
    Next Story
    ×