search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போடி அருகே வானில் தெரிந்த அதிசய நிகழ்வை படத்தில் காணலாம்
    X
    போடி அருகே வானில் தெரிந்த அதிசய நிகழ்வை படத்தில் காணலாம்

    போடி அருகே வானில் தோற்றிய அதிசய நிகழ்வு

    தேனி மாவட்டம் போடி அருகே வானில் தோன்றிய அதிசய நிகழ்வை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி அருகே போடி செல்லும் பாதையில் மாலைப் பொழுது மேகக்கூட்டங்கள் நடுவே பல வண்ணங்களில் பிரகாசமாக மேகக் கூட்டங்களுக்குள் ஒழிந்து அழகாக காட்சியளித்தது. இதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் வினோத நிகழ்வை கண்டு ரசித்தனர்.

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. மழைக்கு முன்னதாக சூரியன் மறையும் காட்சியும், வானவில் தோன்றும் காட்சியும், செங்கதிர்கள் வீசி செவ்வானம் தோன்றும் காட்சியும் மக்களை வெகுவாக கவர்ந்து வரும்.

    இந்நிலையில் தேனியிலிருந்து மூணாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சூரியன் மறையும் மாலை பொழுது மேகக் கூட்டங்களுக்கு நடுவே பல வண்ணங்களில் பிரகாசமாக வானில் திடீரென தோன்றிய அழகிய ஒளிக்காட்சி வாகன ஓட்டிகள் பொதுமக்களுக்கு அழகாய் காட்சி அளித்தது. மேகக்கூட்டங்களுக்கு நடுவே பல வண்ணங்கள் கொண்ட திரைச்சீலை பறந்தது போல அழகாக காட்சியளித்தது.

    சுமார் அரை மணிநேரம் நீடித்த இந்த அழகிய நிகழ்வை பொதுமக்கள் கண்டு ரசித்தனர். திடீரென ஏற்பட்ட இந்த வண்ண ஒளி பொதுமக்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி ஒளிரும் வண்ணம் மேகக்கூட்டங்களை புகைப்படம் எடுத்து ரசித்தனர். திரைப்படங்களில் கதாநாயகியை அறிமுகம் செய்யும் காட்சியில் அவரது துப்பட்டா பறந்து செல்வது போல இருந்தது என பொதுமக்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×