என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    ஈரோட்டில் கொரோனா பாதிப்புடன் 4 பேர் சிகிச்சை

    ஈரோடு மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்தது. தற்போது 4 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்தது. தற்போது 4 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில்  கொரோனா முதல் மற்றும்  2-ம் அலை கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. 

    இந்நிலையில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் என்னும் தொற்றால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை ஏற்பட்டு தினசரி பாதிப்பு அதிகரித்தது. எனினும் தடுப்பூசி அதிக எண்ணிக்கையில் போட்ட காரணத்தினால் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படவில்லை. லேசான அறிகுறிலேயே அவர்கள் குணமடைந்தனர்.

    இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 667 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    பாதிப்பில் இருந்து 1 லட்சத்து 31 ஆயிரத்து 929 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி 734 பேர் இறந்துள்ளனர். நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. 

    தற்போது மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்புடன் 4 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×