என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரிய மாரியம்மன் கோவிலுக்கு அலகு குத்தி வந்த பக்தர்கள்.
    X
    பெரிய மாரியம்மன் கோவிலுக்கு அலகு குத்தி வந்த பக்தர்கள்.

    தீச்சட்டி ஏந்தி அலகு குத்தி வந்த பக்தர்கள்

    ஈரோடு பெரியமாரியம்மன் வகையறா கோவில் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. இன்று ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி அலகு குத்தி வந்து வழிப்பட்னர்.
    ஈரோடு:

    ஈரோடு பெரியமாரியம்மன் வகையறா கோவில் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. இன்று ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி அலகு குத்தி வந்து வழிப்பட்னர்.

    ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் மற்றும் வகையறா கோவில்களான நடு மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோவில்கள் உள்ளன.


    இந்த கோவில்களில் ஆண்டு தோறும் நடைபெறும் குண்டம், தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள்.ஆனால் கொரோனோ காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பெரிய மாரியம்மன் வகையறா கோவில் பண்டிகைகள் நடத்தப்படாமல் இருந்தன.

    தற்போது 2 ஆண்டுக்கு பிறகு கோவில்களின் குண்டம் மற்றும் தேர்திருவிழாவானது கடந்த 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான கோவில்களில் கம்பம் நடும் நிகழ்ச்சி கடந்த 19-ந் தேதி நடைபெற்றது.

    இதில் 3 கோவில் களுக்கான கம்பங்கள் எடுத்து வரப்பட்டு பூஜை செய்யப்பட்டு கோவில்களில் நடப்பட்டது.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


    இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு ஈரோடு மற்றும் அதன் சுற்று பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

    குறிப்பாக பெண்கள் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி வழிபட்டு செல்கின்றனர். இன்று ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும் வந்து வழிபட்டனர்.

    இதேபோல் நூற்றுக் கணக்கான பெண்கள் கம்பத்திற்கு நீண்ட வரிசையில் நின்று புனித நீர் ஊற்றி வழிபட்டனர். தொடர்ந்து வரும் 30-ந் தேதி குண்டம் விழாவும், 31-ந் தேதி தேர்த்திருவிழாவும் நடைபெறுகிறது.

    அதனை தொடர்ந்து வருகிற 2-ந் தேதி கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு கம்பங்கள் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. 3-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.
    Next Story
    ×