என் மலர்
உள்ளூர் செய்திகள்

திட்டக்குடி நகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு
திட்டக்குடி:
திட்டக்குடி நகர த.வா.க., துணைத்தலைவர் சுதாகர் தலைமையில் அக்கட்சியினர் நகராட்சி கமிஷனர் ஆண்டவனிடம் மனு அளித்தனர். மனுவில் கூறி இருப்பதாவது:-
திட்டக்குடி நகராட்சியிலுள்ள 24 வார்டுகளிலும் முறையான குடிநீர் வினியோகம் இல்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். குடிநீர் பற்றாக்குறையால் தினசரி அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. 14 மற்றும் 15-வது வார்டுகளில் முற்றிலுமாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
14-வது வார்டில் கட்டப்பட்டுள்ள 60ஆயிரம் லிட்டர் கொள்ளளவுடைய மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.
மனு அளிக்கும் போது த. வா.க.,ஒன்றியசெயலாளரும், நகராட்சி கவுன்சில ருமான சுரேந்தர், த.வா.க.,நிர்வாகிகள் பாண்டியன், கதிரவன் உட்பட பலர் உடனிருந்தனர்.






