என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
கீழ்பவானி வாய்க்காலில் குளித்த முதியவர் தண்ணீரில் மூழ்கி பலி
கீழ்பவானி வாய்க்காலில் குளித்த முதியவர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
கீழ்பவானி வாய்க்காலில் குளித்த முதியவர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு அடுத்த முத்தம் பாளையம் பூந்துறை ரோடு, பாங்க் நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 68). இவர் அதே பகுதியில் கோழிகளை வளர்த்து வருகிறார்.
இவரது மகன் ராஜேஷ். ஈரோடு வண்டியூரான் கோவில் பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று பழனிச்சாமி அரச்சலூர்&ஈரோடு ரோடு, திருமங்கலம் பிரிவிலுள்ள கீழ்பவானி வாய்க்காலில் குளித்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவர் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அரச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பழனிச்சாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






