என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரோட்டின்  நடுவில் உள்ள தடுப்பில் மோதி விபத்தான லாரி.
    X
    ரோட்டின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி விபத்தான லாரி.

    நடுரோட்டில் தடுப்புகள் மீது மோதி நின்ற லாரிகள்

    சிமெண்ட் ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்திற்கு முன்புறம் போடப்பட்டுள்ள இரும்புத் தடுப்பில் மோதி நின்றது.
    ஈரோடு:

    பூந்துறையில் இருந்து இன்று அதிகாலை ஈரோடு நோக்கி ஆவின் பால் லாரி வந்து கொண்டிருந்தது. 

    முள்ளாம்பரப்பு தனியார் மருத்துவமனை அருகே  லாரி வந்து கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடத் தொடங்கியது.

    அப்போது ரோட்டின் நடுவில் உள்ள தடுப்பில் லாரி மோதி நின்றது. இதில் லாரியின் முன்பகுதி சேதமடைந்தது. 

    ஆனால் யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை. 

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.  பின்னர் லாரி அகற்ற ப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

    இதேபோல் அதிகாலை ஈரோடு சென்னிமலை ரோடு கே.கே.நகர் ரெயில்வே நுழைவு பாலத்தில் ஈரோட்டிலிருந்து சென்னிமலையில் நோக்கி சிமெண்ட்  ஏற்றிக்கொண்டு  வந்த லாரி ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்திற்கு முன்புறம் போடப்பட்டுள்ள இரும்புத் தடுப்பில் மோதி நின்றது. 

    இந்த விபத்தில் யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை. 

    இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதிகாலை நேரத்தில் விபத்து நடந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.
    Next Story
    ×