என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
மதுபாட்டிலால் வாலிபர் மண்டையை உடைத்த தொழிலாளி
மதுவில் கலக்க தண்ணீர் தராததால் ஆத்திரம் மதுபாட்டிலால் வாலிபர் மண்டையை உடைத்த தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினற்னர்.
கோபி:
மதுவில் கலக்க தண்ணீர் தராததால் ஆத்திரம் மதுபாட்டிலால் வாலிபர் மண்டையை உடைத்த தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினற்னர்.
கோபி செட்டிபாளையம் அருகே உள்ள நாயக்கன்காடு பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 40). கூலி தொழிலாளி.
இவர் கரட்டுப்பாளையம் குப்பை கிடங்கு அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடை யில் மது வாங்கினார். தொடர்ந்து அவர் அருகே உள்ள மறைவான இடத்தில் மது குடித்து கொண்டு இருந் தார்.
அப்போது கோபி செட்டிபாளையம் அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த முருகன் (54) என்பவரும் அந்த பகுதிக்கு மது குடிக்க வந்தார். அப் போது தர்மராஜிடம் முருகன் மது குடிக்க தண்ணீர் கேட்டார். ஆனால் தர்மராஜ் மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு தாக்கி கொண்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த முருகன் அருகே கிடந்த மது பாட்டிலை எடுத்து தர்மராஜ் தலையில் அடித்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனால் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கோபி செட்டி பாளையம் போலீ சார் முருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






