என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
மத்திய அரசை கண்டித்து 28-ந் தேதி மறியல் போராட்டம்
மத்திய அரசை கண்டித்து வரும் 28-ந் தேதி மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
ஈரோடு:
மத்திய அரசை கண்டித்து வரும் 28-ந் தேதி மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
பெருந்துறை தாலுக்கா அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டம் பெருந்துறையில் ஏ.ஐ.டி.யு.சி சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஐ.என்.டி.யு.சி மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி சின்னசாமி, எல்.பி.எப் மனோகரன், ஐ.என்.டி.யு.சி மகாலிங்கம், விவசாயிகள் சங்கம் துளசிமணி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி பொன்னையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, நடவடிக்கைகளை கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்து சங்கங்கள் சார்பில் வருகின்ற 28-ந் தேதி பெருந்துறையில் மறியல் போராட்டம் பேரவை நடத்துவது, தினசரி மார்க்கெட்டில் இருந்து பேரணியாக புறப்பட்டு பங்களா வீதியில் உள்ள தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது, 29-ந் தேதி சென்னிமலையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, கோரிக்கைகளை விளக்கி பிரசாரம் மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story






