என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பெண் டாக்டரிடம் சில்மிஷம் செய்த கேரள வாலிபர் சிறையில் அடைப்பு

    ஓடும் ரெயிலில் பெண் டாக்டரிடம் சில்மிஷம் செய்த கேரள வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    ஈரோடு:

    ஓடும் ரெயிலில் பெண் டாக்டரிடம் சில்மிஷம்  செய்த கேரள வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    சென்னை வேளச்சேரி சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க பெண் டாக்டர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் கேரள மாநிலம் கண்ணனூருக்கு செல்வதற்காக சென்னை& மங்களு£ர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

     அவர்கள் பயணம் செய்த முன் பெட்டியில் கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவரும் பயணம் செய்தார். 

    அந்த ரெயில் சேலத்தை கடந்து ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. பெண் டாக்டர் மற்றும் அவரது குடும்பத்தார் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த நபர் பெண் டாக்டரிடம் ஆபாச வார்த்தைகளால் பேசி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
     இதுகுறித்து அந்த பெண் டாக்டர் தனது குடும்பத்தாரிடம் தெரிவித்தார்.

     அப்போது ரெயில் ஈரோடு ரெயில் நிலையத்தில் வந்து நின்றது. உடனடியாக அந்த பெண் டாக்டர் குடும்பத்தினர் நடந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். 

    இதையடுத்து ஈரோடு ரெயில்வே போலீசார்  சம்பந்தப்பட்ட அந்த முன்பதிவு பெட்டிக்கு சென்று அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் பெண் டாக்டரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டது.

     போலீஸ் விசாரணையில் பெண் டாக்டரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவர் கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் காலத்திங்கள் பகுதியைச் சேர்ந்த ரபீக் (39) என்பதும் அவர் கோழிக்கோட்டில் மின் அலங்கார விளக்கு கடை நடத்தி வருவதும் தெரியவந்தது

    சம்பவத்தன்று அவர் சென்னையிலிருந்து பொருட்களை வாங்கி கொண்டு கேரளாவுக்கு வந்து கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

     ரபீக்கிற்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
    இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ரபீக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×