என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி
    X
    மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி

    வந்தவாசியில் நிவாரண தொகை கேட்டு மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்

    வந்தவாசியில் நிவாரண தொகை கேட்டு மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பாஞ்சரை. வெடால். ஆச்சமங்கலம். குணகம்பூண்டி. அகரம். ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய நிலத்தின் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டது.

    மின் கோபுரங்கள் அமைக்கப்பட்ட விளைநிலத்திற்கு கடந்த 2 ஆண்டுகளாக இதுவரை நிவாரண தொகை வழங்கபடவில்லை. பல முறை விவசாயிகள் கேட்டும் நிவாரண தொகை கிடைக்கவில்லை.

    இதனால் விரக்தியடைந்த விவசாயிகள் தெள்ளார் அருகே உள்ள பாஞ்சரை கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் குடியேறினர். தொடர்ந்து அங்கு 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×