என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைதான கருப்புசாமி.
திருப்பூர் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய எலக்ட்ரீசியன் கைது
திருப்பூர் அருகே 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கியது தொடர்பாக எலக்ட்ரீசியனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள ராமபட்டணம் பகுதியை சேர்ந்த சின்னன் என்பவரது மகன் கருப்புசாமி (வயது 23). எலக்ட்ரீசியன். இவர் அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் பழகி உள்ளார். பின்னர் அந்த சிறுமியிடம் திருமணம் செய்வதாக கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்தநிலையில் அந்த சிறுமிக்கு சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பெற்றோர் அந்த சிறுமியை தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கு பணியில் இருந்த பெண் டாக்டர்கள் சிறுமியை பரிசோதனை செய்ததில் அந்த சிறுமி 8 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கருப்புசாமி சிறுமியை கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கருப்புசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story