search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ள ஓவர் டேங்க் மற்றும் சின்டெக்ஸ் மினி டேங்.
    X
    பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ள ஓவர் டேங்க் மற்றும் சின்டெக்ஸ் மினி டேங்.

    கலங்கலாக வரும் குடிநீரால் மக்கள் அவதி

    வேப்பங்குளத்தில் பராமரிப்பில்லாத மேல்நிலை தொட்டியிலிருந்து கலங்கலாக வரும் குடிநீரால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
    மெலட்டூர்:

    அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், அன்னப்பன்பேட்டை ஊராட்சியில் உள்ள வேப்பங்குளம் கிராமத்தில் கிராம மக்கள் பயன் பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை மாதந் தோறும் சுத்தம் செய்யாததால் தண்ணீர் மஞ்சள் நிறத்தில், கருப்பு மண்கலந்து வருவதால் கிராமமக்கள் தண்ணீரை குடிநீர் மற்றும் இதர தேவைக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. 

    மேலும் இங்கு குடிநீர் மற்றும் இதர தேவைக்காக மினி சின்டெக்ஸ் டேங்க் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

    அதுவும் பராமரிப்பு இல்லாததால் வாட்டர் டேப்புகள் இல்லாமல் தண்ணீர் டேங்கில் இருந்து வெளியேறி வீணாகி வருகிறது. குடிநீர் மற்றும் இதர தேவைக்கும் அருகில் உள்ள விவசாய பம்பு செட்டுகளை நம்பியிருக்கும் நிலை உள்ளதாக கிராம வாசிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, வேப்பங்குளம் பகுதியில் ஊராட்சி மூலம் அமைக்கப் பட்டுள்ள வாட்டர் டேங் சுத்தம் செய்து பல மாதங்கள் ஆகிவிட்டது. அதனால் தண்ணீரை குடிக்க முடியாமல் 
    சிரமப்படுகிறோம்.  ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உடனடியாக இந்த குடிநீர் டேங்கை முறையாக சுத்தம் செய்துவிட்டு பின்னர் தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    Next Story
    ×