என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
பெங்களூருவுக்கு கடத்த முயன்ற 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்- 3 பேர் கைது
பெங்களூருவுக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 6 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்க சாவடி வழியாக பெங்களூருவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு மினி லாரி டிரைவர் போலீசாரை பார்த்ததும் வாகனத்தை வேகமாக ஓட்டினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் துரத்தி சென்று மினி லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் மினி லாரியில் மூட்டை, மூட்டையாக 6 டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிசி மூட்டைகள் சென்னை திருவேற்காடு பகுதியில் இருந்து பெங்களூருவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.
இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் காஞ்சிபுரம் மாவட்டம் அய்யம்பேட்டை, பரமேஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த செல்வவிநாயகம்(வயது 33), திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த வேலு(50), திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மோகன்(41), ஆகியோரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 6 டன் ரேஷன் அரிசியை காஞ்சிபுரம் குடிமை பொருள் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
Next Story






