என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    புகையிலை பொருட்கள் பறிமுதல்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீசார் ரோந்து சென்றபோது புகையிலை பொருட்கள் வைத்து இருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் டவுன் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்து இருந்த மம்சாபுரம் ஜெயச்சந்திரன் (37), செக்கடி தெரு மாரியப்பன் (27)ஆகிய 2பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.21ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டியை சேர்ந்த வெற்றிசெல்வம் என்பவர் 16புகையிலை பாக்கெட்டுகள் வைத்து இருந்ததாக கைது செய்யப்பட்டார்.


    Next Story
    ×