என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர்
கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில பா.ஜ.க அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிம்சன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ரவீந்திரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
மாவட்ட செயலாளர் துரைராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சீனிவாசன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், மாவட்ட பொருளாளர் வைரவன், மாவட்ட துணைச் செயலாளர் ராயர், இயற்கை விவசாயி ராமலிங்கம் மற்றும் விவசாய சங்க மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்டோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
Next Story






