search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட அறிவியல் மைய அதிகாரி எஸ்.எம்.குமார், உலக தமிழ் மருத்துவ கழக தலைவர் மைக்கேல் ஜெயராஜ் பேட்டியளித்த காட்சி
    X
    மாவட்ட அறிவியல் மைய அதிகாரி எஸ்.எம்.குமார், உலக தமிழ் மருத்துவ கழக தலைவர் மைக்கேல் ஜெயராஜ் பேட்டியளித்த காட்சி

    நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் நாளை முதல் ‘மூலிகை முற்றம் 2.0’ கண்காட்சி

    நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் நாளை முதல், முதல் மற்றும் 3-ம் சனிக்கிழமைகளில் ‘மூலிகை முற்றம் 2.0’ கண்காட்சி நடத்தப்படுகிறது.
    நெல்லை:

    நெல்லை மாவட்ட அறிவியல் மைய அதிகாரி எஸ்.எம்.குமார், உலக தமிழ் மருத்துவ கழக தலைவர் மைக்கேல் ஜெயராஜ் ஆகியோர் இன்று நிருபர் களுக்கு பேட்டி யளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-


    தமிழகத்தில் மொத்தம் 1,200 மூலிகைகள் உள்ளது. இதில் 800-க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காணப்படுகிறது.

    முன்காலத்தில் சித்த மருத்துவ மூலிகை செடிகளால் தயாரிக்கப்படும் மருந்துகளின் நன்மை குறித்து அனைவரும் அறிந்திருந்தனர்.

    எனவே சித்த மருத்துவத்தின் மகத்துவம் குறித்தும், அதிலிருந்து மருந்துகள் தயாரிப்பது குறித்தும் அனைத்து பொதுமக்களும் அறியும் வகையில் நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் 3-வது சனிக்கிழமைகளில் மூலிகை முற்றம் என்ற கண்காட்சி விளக்கம் நடத்தப்பட்டது.

    கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வந்த இந்த நிகழ்ச்சியில் மூலிகையில் இருந்து கசாயம் உள்ளிட்ட மருந்துகள் தயாரிப்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படாமல் இருந்தது. தற்போது தமிழகம் முழுவதும் தொற்றின் வேகம் பெரும்பாலும் குறைந்துவிட்டது. எனவே மீண்டும் அதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி மூலிகை முற்றம் 2.0 என்ற பெயருடன் நாளை முதல் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் 3-ம் சனிக்கிழமைகளில் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை நடத்தப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் 2 மூலிகைகளை கொண்டு அதன் மகத்துவம் குறித்தும், அதில் இருந்து கசாயம் உள்ளிட்ட மருந்துகள் தயாரிப்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்படும்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனை வருக்கும் இந்த மூலிகை செடிகள் இலவசமாக வழங்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அப்போது மாவட்ட அறிவியல் மைய கல்வி அலுவலர் மாரி லெனின் உடனிருந்தார்.
    Next Story
    ×