என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது செய்யப்பட்ட விக்டர் வினோத்குமார்
    X
    கைது செய்யப்பட்ட விக்டர் வினோத்குமார்

    மனைவியின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி

    மயிலாடுதுறை அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சித்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம்,  தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோயில் ஒன்றியம் கூடலூர் நடுத் தெருவை சேர்ந்தவர் விக்டர் வினோத்குமார் (வயது 35). 

    நல்லிச்சேரி கீழபாதி வாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் அய்யாபிள்ளை மகள் புவனேஸ்வரி (எ) ஹேமா ஜூலியட் (37). இவர்களுக்கு கேப்ரியல் பிரின்ஸ் என்ற மகனும், பெர்னிக்கா சஜன் என்ற மகளும் உள்ளனர். குடும்ப பிரச்சனையில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 

    இந்நிலையில் நேற்று மாலை பரசலூர் கடை தெருவுக்கு வந்த மனைவியை சேர்ந்து வாழ வருமாறு அழைத்தபோது அவர் மறுத்ததால் ஆத்திரத்தில் பிளேடால் மனைவியின் கழுத்தை கிழித்துள்ளார்.  அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து தடுத்து விக்டர் வினோத்குமாரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் ஹேமா ஜூலியட்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

    இதுகுறித்து செம்பனார் கோவில் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர்.

    Next Story
    ×