என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
கடையில் செல்போன்கள் திருடிய வடமாநில வாலிபர் கைது
பெருந்துறை அருகே காஞ்சிக்கோவில் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 36). இவர் சென்னி மலை அருகே ஈங்கூரில் உள்ள சிப்காட் ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
சென்னிமலை:
பெருந்துறை அருகே காஞ்சிக்கோவில் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 36). இவர் சென்னி மலை அருகே ஈங்கூரில் உள்ள சிப்காட் ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
கடந்த டிசம்பர் 13-ந் தேதி இரவு வழக்கம் போல் சத்தியமூர்த்தி கடையை பூட்டி விட்டு சென்றார். மறு நாள் காலை கடைக்கு வந்து பார்த்த போது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு கடையில் இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 25 செல் போன்கள் காணாமல் போனது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து கடை உரிமையாளர் சத்தியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த அப்பகுதியில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில் வாலிபர் ஒருவர் செல்போன்களை திருடி சென்றது பதிவாகி இருந்தது. இதனை வைத்து போலீசார் அந்த வாலிபரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் பெருந் துறை அருகே பணிக்கம் பாளையம் பகுதியில் செல் போன்களை திருடி கொண்டு சென்ற வாலிபர் தங்கி இருப்பதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் கொல்கத்தா மாநிலத்தை சேர்ந்த விஸ்வநாத மண்டேல் (வயது 32) என்பதும், இவர் பெருந்துறை அருகே உள்ள ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வருவதும் தெரிய வந்தது.
மேலும் ஈங்கூர் பகுதியில் உள்ள கடையில் செல்போன்களை திருடி கொண்டு கொல்கத்தா தப்பி சென்றதும், 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பெருந்துறை பகுதிக்கு வந்ததும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் விஸ்வநாத மண்டேலை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை பெருந் துறை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத் தனர்.
Next Story






