என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    லாரியில் 22 டன் ரேசன் அரிசி கடத்தல் - வாலிபர் கைது

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே லாரியில் 22 டன் ரேசன் அரிசி கடத்தியது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் கோட்டை பகுதியில் தாசில்தார் காதர்அலி தலைமையிலான வருவாய்த்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கிளியூர் பகுதியிலிருந்து நரிப்பாளையம் வழியாக டாரஸ் லாரி ஒன்று சந்தேகத்திற்கிடமாக வந்தது. அந்த லாரியை அதிகாரிகள் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் 22 டன் ரேசன் அரிசி மூட்டை கடத்தப்பட்டது தெரியவந்தது. உடனே அதிகாரிகள் லாரியும் லாரியை ஓட்டி வந்த வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 33) என்பவரை பிடித்து எலவனசூர் கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    எலவனாசூர்கோட்டை போலீசார் லாரியையும் சதீஷ் குமாரையும் விழுப்புரம் மாவட்டம் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.
    Next Story
    ×