என் மலர்
உள்ளூர் செய்திகள்

சமையல் கூடத்தில் கியாஸ் சிலிண்டர் கசிந்து தீப்பிடித்து எரிவதை படத்தில் காணலாம்.
சமையல் கூடத்தில் கியாஸ் சிலிண்டர் கசிந்து தீ விபத்து
காஞ்சிகோயிலில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சமையல் கூடத்தில் கியாஸ் சிலிண்டர் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது.
பெருந்துறை:
காஞ்சிகோயிலில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சமையல் கூடத்தில் கியாஸ் சிலிண்டர் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது.
பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிகோயிலில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 180 மாணவர்கள் படித்து வருகின்றனர். 6 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த மாணவர்களுக்கு சத்துணவு செய்வதற்காக சத்துணவு ஆசிரியராக வனிதா மற்றும் சத்துணவு உதவியாளராக சீதா, பணியாளராக கலா ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த சத்துணவு கூடத்தில் ஒரு விறகு அடுப்பும், ஒரு கியாஸ் அடுப்பும் உள்ளது. இதில் விறகு அடுப்பில் பணியாளர் கலா சமையல் செய்து கொண்டு இருந்தார். கியாஸ் அடுப்பில் கியாஸ் சரியாக வராததால் சத்துணவு ஆசிரியர் வனிதா கியாஸ் சிலிண்டர் மூடியை திறக்க முற்பட்ட போது எதிர் பாராதவிதமாக சிலிண்டர் கியாஸ் வெளியேறியது.
அருகில் விறகு அடுப்பு எரிந்து கொண்டிருந்ததால் கியாஸ் சிலிண்டரில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. உடனே பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். விரைந்து தீயை அணைத்ததால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் விசாரித்து வருகிறார்.
Next Story






