என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது

    சித்தோடு அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஈரோடு

    சித்தோடு அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். 

    சித்தோடு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

    அப்போது சித்தோடு அடுத்த பாலா காட்டூர் அப்பகுதியில் ஒரு இடத்தில் ஒரு கும்பல் வட்டமாக அமர்ந்து பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததனர். 

    இதனை கவனித்த போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்தது. விசாரணையில் அவர்கள் காதர், கார்த்தி, இனியாசா, சங்கர், சுல்தான் முஸ்தபா, மணிகண்டன், பெரியசாமி, பிரபு, தீனதயாளன், பிரபு, வீரபத்திரன் ஆகிய 11 பேர் என தெரிய வந்தது. 

    இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து 11 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.24 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×