என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லட்சுமி
    X
    லட்சுமி

    கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் தற்கொலை

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே மலை யாண்டபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (வயது 34). இவர்களுக்கு 2  மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் லட்சுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலி பருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாக கூறப் படுகிறது. 

    இதற்கிடையே கள்ளக் காதலனுக்கும், லட்சுமிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு தகராறு வந்ததாக கூறப் படுகிறது. 

    இதில் மனமுடைந்த லட்சுமி, நேற்று விஷம் குடித்து உயிருக்கு போராடினர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு ஆ,ஸ்பத்திரியில் சேர்த் தனர். பின்னர் மேல் சிகிச் சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த் தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்காதல் விவகாரத் தில் இளம்பெண் தற் கொலை செய்து கொண்ட சம்பவம் மத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.

    Next Story
    ×