என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோபி:
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள அழகம் பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 20). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் தொழி லாளியாக வேலை பார்த்து வருகிறார்.
அதே நிறுவனத்தில் திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி வேலை பார்த்து வந்தார். இதில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து தங்கராஜ் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு தங்கராஜ் அடிக்கடி குடித்து விட்டு வந்து அந்த சிறுமியிடம் தகராறு செய்து வந்தார்.
இது குறித்து அக்கம் பக்கம் இருந்தவர்கள் சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சைல்டு லைன் அமைப்பினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப் போது சிறுமி உரிய திருமண வயது அடைய வில்லை என தெரிய வந்தது.
இதையடுத்து சைல்டு லைன் அமைப்பினர் கோபி செட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து சிறுமி யின் உறவினர்கள் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித் தனர்.
இது குறித்து போலீசார் தங்கராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத் தனர்.
Next Story






