என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருத்துவமுகாம்
    X
    மருத்துவமுகாம்

    மருத்துவ மதிப்பீட்டு முகாம்

    சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 16ந்தேதி மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற உள்ளது.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் மாற்றுத் திறனுடைய குழந்தைக ளுக்கான உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு, மருத்துவ மதிப்பீட்டு முகாம் 12 ஒன்றியங்களிலும் வருகிற 16ந்தேதி முதல் முதல் 7ந்தேதி வரை நடைபெற உள்ளது.  

    இந்த மருத்துவ முகாமை நடத்துவதற்கான கலந்தாலோசனை கூட்டம் சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடந்தது. 

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், இணை இயக்குநர் (சுகாதாரம் மற்றும் மருத்துவப்பணிகள்), மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர், திட்ட ஒருங்கிணைப்பாளர், (முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம்), சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் (ஒருங் கிணைந்த பள்ளிக்கல்வி), உதவித் திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி) ஆகியோர் கலந்து கொண்டனர். 

    இந்த  மருத்துவ முகாம்க ளின் வாயிலாக  பிறப்பு முதல் 18வயது வரையுள்ள மாற்றுத் திறனுடைய குழந்தைகளை மதிப்பீடு செய்து அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை போன்றவை முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. 2021&22ம் கல்வி யாண்டில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் முன்தொடக்கநிலை, தொடக்கநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாற்றுத் திறனுடைய மாணவ, மாணவிகள் அனைவரையும் இந்த மருத்துவ முகாம்களில் கலந்து கொள்ள செய்ய வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

    அதன்படி, அதிக எண்ணிக்கையிலான மாற்றுத்திறனுடய குழந்தைகள் பயன்பெறும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி இம்மருத்துவ முகாம்களை நடத்திட மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார் வையாளர்கள் (பொ), வட்டார ஒருங் கிணைப்பாளர்கள், சிறப்பு பயிற்றுநர்கள் மற்றும் இயன்முறை பயிற் றுநர்கள் ஆகியோர் முழு ஒத்துழைப்பு வழங்க அறி வுறுத்தப்பட்டுள்ளது.
     
    மேலும் சிவகங்கை மாவட்டத்தில் 12ஒன்றியங்களிலும் மாற்றுத்திறனுடைய மாணவ மாணவிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற உள்ளது.

    16ந்தேதி (புதன்கிழமை) திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், பாத்திமா நடுநிலைப்பள்ளி, பஸ்நிலையம் அருகிலும், 17&ந் தேதி (வியாழக்கிழமை) கல்லல் ஊராட்சி ஒன்றியம், அரசு பெண்கள் உயர்¢நிலைப்பள்ளியிலும், 18ந்தேதி (வெள்ளிக்கிழமை) சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், காரைக்குடி பி.ஆர்.என்.சி. நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம், அனுமந்தக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும்,  தேதி (புதன்கிழமை) அன்று தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், தேவகோட்டை நகராட்சி உயர்நிலைப்பள்ளியிலும் முகாம்கள் நடைபெற உள்ளன.

    24ந்தேதி (வியாழக்கிழமை) திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியிலும்,  25ந் தேதி (வெள்ளிக்கிழமை) எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியம், வி.புதூர் ஊராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 29ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 30ந்தேதி (புதன்கிழமை) அன்று மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், ஓ.வி.சி. மேல்நிலைப்பள்ளி, பழைய பஸ்நிலையம் அருகிலும், 5ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இளையான்குடி ஊராட்சி ஒன்றியம், இளையான்குடி மேல்நிலைப்பள்ளியிலும், 6ந்தேதி (புதன்கிழமை) காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திலும், 7ந்தேதி (வியாழக்கிழமை) சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், மருதுபாண்டியர் நகர், அரசு மேல்நிலைப்பள்ளியிலும் காலை 9.30 மணி முதல் மாற்றுத்திறனுடைய மாணவ, மாணவிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்கள் நடைபெறுகிறது.

    Next Story
    ×