என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிடிபட்ட பாம்புகள்.
பாம்புகளை வன பகுதியில் விட கோரிக்கை
பிடிபடும் பாம்புகளை வன பகுதியில் விட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வரும் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து அடிக்கடி நல்ல பாம்பு, சாரை பாம்பு, மலைப்பாம்பு, என அனைத்து வகையான விஷ பாம்புகளும் ஊடுருவி வருகிறது இதனால் குடியிருப்புவாசிகளும் மற்றும் பொது மக்களும் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
இதுகுறித்து இந்தப்பகுதி மக்கள் கூறுகையில், தற்சமயம் கோடை காலம் என்பதால் உணவு தேவைக்காகவும், தண்ணீர் தேவைக்காகவும், பாம்புகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் ஊடுருவி வருவதோடு மட்டுமல்லாமல் அங்கு வளர்க்கும் பிராணிகளான கோழி, ஆடு முதலியவற்றை விழுங்கி விடுகிறது.
சில சமயங்களில் வீட்டின் பின்புறங்களில் உள்ள தோட்டங்களில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாக தங்கியும் விடுகிறது. பிடிபடும் பாம்புகளை தீயணைப்புத் துறையினர் அருகாமையிலுள்ள உள்ள காட்டுப் பகுதிக்குள் கொண்டுபோய் விடாமல் மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் உள்ள அடர்ந்த மலைப்பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும் கொண்டு போய்விடுமாறு கோரிக்கை விடுத்தனர்.
கடந்த 2 வாரங்களில் 5-க்கும் மேற்பட்ட பாம்புகள் திருப்பத்தூர் நகர் பகுதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் பிடிபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






