என் மலர்
உள்ளூர் செய்திகள்

குழந்தை தொழிலாளி, மீட்பு
குழந்தை தொழிலாளி மீட்பு
சிவகங்கை அருகே டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த குழந்தை தொழிலாளி மீட்கப்பட்டார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவின் பேரில் சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் அறிவரையின் பேரில் காரைக்குடி, ஆத்தங்குடி பகுதியில் குழந்தை தொழிலாளர் இருப்பதாக “சைல்டு லைன்” மூலம் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் கதிரவன், காவல் உதவி ஆய்வாளர் அல்போன்ஸ், கிராம நிர்வாக அலுவலர் அர்ச் சுனன், சைல்டு லைன் குழு உறுப்பினர் ஹரிகரன் ஆகியோர் காரைக்குடி, ஆத்தங்குடி பகுதியில் ஆய்வு செய்தனர்.
அப்போது “டைல்ஸ்” நிறுவனத்தில் பணிபுரிந்த 13 வயதிற்குட்பட்ட சிறுவன் மீட்கப்பட்டான். இதை யடுத்து நிறுவன உரிமை யாளர் மீது குழந்தை தொழி லாளர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
2021-ம் ஆண்டு முதல் கடந்தமாதம் பிப்ரவரி வரையிலான காலத்தில் சிவகங்கை வட்டத்தில் சிவகங்கை மாவட்ட குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு குழு மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 14 வயதிற்குட்பட்ட குழந்தை தொழிலாளர்களை பணி யில் அமர்த்திய 14 கடை நிறுவன உரிமையாளர்கள் மீது சிவகங்கை,காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி, தேவகோட்டை ஆகிய நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவற்றில் தேவகோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத் தில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளியை பணியில் அமர்த்திய கடை நிறுவன உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தில் மற்ற நீதிமன்றங்களில் 13 வழக்குகள் நடைபெற்று வருகிறது. மேலும் 14 வய திற்கு மேல் 18 வயதிற் குட்பட்ட வளரிளம் பருவத்தினரை பணியில் அமர்த்திய 24 கடை நிறுவன உரிமையாளர்கள் மீது மாவட்ட குற்றவியல் நடுவர்- மாவட்ட கலெக்டரால் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. 4 கடை நிறுவன உரிமை யாளர்கள் மீது குற்றவியல் நடுவர் நீதின்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிவது கண்ட றியப்பட்டால், கீழ்க்கண்ட இணையதள முகவரி, தொலைபேசி எண் மற்றும் கீழ்க்காணும் அலுவ லரிடம் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
1) Pencil Portal https://pencil.gov.in 2) தொழிலாளர் உதவி ஆணை யர் (அமலாக்கம்) சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவ லக பெருந் திட்ட வளாகம், அரசினிப்பட்டி ரோடு, காஞ்சிரங்கால், சிவகங்கை. 04575-240521.
3) Child Help line 1098 (இலவச தொலைபேசி எண்).
மேற்கண்ட தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக் கம்) ராஜ்குமார் தெரிவித் துள்ளார்.
Next Story






