search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு கோட்டை ஓங்காளியம்மன் கோவில் குண்டம் விழாவில் குண்டம் இறங்கிய பக்தர்கள்.
    X
    ஈரோடு கோட்டை ஓங்காளியம்மன் கோவில் குண்டம் விழாவில் குண்டம் இறங்கிய பக்தர்கள்.

    ஈரோடு கோட்டை ஓங்காளியம்மன் கோவில் குண்டம் விழா

    ஈரோடு கோட்டை ஓங்காளியம்மன் கோவில் குண்டம் விழா இன்று தொடங்கியது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கினர்.
    ஈரோடு:

    ஈரோடு கோட்டை ஓங்காளியம்மன் கோவில் குண்டம் விழா இன்று தொடங்கியது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கினர்.

    ஈரோடு கோட்டை பெரியபாவடி ஓங்காளியம்மன் கோவில் குண்டம், பொங்கல் திருவிழா கடந்த 7-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 

    பின்னர் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், 10-ந் தேதி விளக்கு பூஜையும் நடைபெற்றது. 

    விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் மற்றும் பொங்கல் வைத்தல் ஆகியவை இன்று காலை நடைபெற்றது. கோவில் தலைமை பூசாரி முதலில் குண்டம் இறங்கி தொடங்கி வைத்தார். 

    அதன் பின்னர் பக்தர்கள் குண்டம் இறங்கினர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று இரவு அம்மன் திருவீதி உலா நடைபெற்றத. இன்று இரவு தெப்போற்சவம் நிகழ்ச்சியும், நாளை 13&ந் தேதி மறு அபிஷேகத்துடன் விழா நிறைவடைகின்றது. 
    Next Story
    ×