search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    சளி- காய்ச்சலால் அவதிப்படும் அவிநாசி பகுதி பொதுமக்கள்

    தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, ‘குளோரினேஷன்’ செய்து தான் வினியோகிக்கப்படுகிறது.
    அவிநாசி:

    அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளி செல்லும் குழந்தைகள், பெரியவர்கள் என பல தரப்பினரும், சளி தொந்தரவால் அவதிப்படுகின்றனர். 

    கடந்த 2 மாதமாக அவிநாசிக்கு புதிய கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், பவானி ஆற்றுநீரை மையமாக வைத்து, சிறுமுகை பகுதியில் இருந்து பெறப்படும் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. 3 நாட்களுக்கு ஒரு முறை தடையின்றி தண்ணீர் வினியோகிக்கப்படும் நிலையில் ‘இந்த தண்ணீரை பருக துவங்கிய பிறகுதான், சளி தொந்தரவு அதிகரிக்கிறது என பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

    இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    புதிய கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அவிநாசிக்கு மட்டுமின்றி, அன்னூர், மோப்பிரிபாளையம், பல்லடம், திருப்பூர் ஊரக பகுதியில் உள்ள 155 குக்கிராமங்களுக்கும் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. 

    தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, ‘குளோரினேஷன்’ செய்து தான்  வினியோகிக்கப்படுகிறது. இந்த தண்ணீரை குடிப்பதால் சளி தொந்தரவு ஏற்படுகிறது என்ற புகார் வரவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சுகாதாரத்துறையினர் கூறியதாவது:-

    இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவும், பகலில் அதிகளவு வெயில் என காலநிலை மாற்றம் தான், சளி தொந்தரவு ஏற்பட காரணம். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சளித்தொந்தரவால் பாதிப்பில்லை. மிக அதிக அளவு சளி, மூச்சிறைப்பு போன்ற பாதிப்பு தென்பட்டால் மட்டும் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். சளி தொந்தரவு ஏற்பட்டால் தான் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக அர்த்தம். பருகும் தண்ணீரால் சளி தொந்தரவு ஏற்படுவதில்லை.

    மக்கள் பருகும் தண்ணீர் அவ்வப்போது ஆய்வுக்கூட பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த ஆய்வறிக்கையில் தண்ணீரில் குறைபாடு எதுவும் கண்டறியப்படவில்லை. தண்ணீரை காய்ச்சி, ஆற வைத்த பருகும் நடைமுறையை மக்கள் தொடர்ந்து கையாள வேண்டும். 

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×