என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட கருப்புசாமி
தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது
பெருந்துறை அருகே தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பெருந்துறை அடுத்த கராண்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர். காளி யப்பன். இவரது மனைவி தனலட்சுமி (வயது 62). காளியப்பன் ஏற்கனவே இறந்து விட்டார்.
தனலட்சுமி அந்த பகுதி யில் விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா தேவி என்ற மகள் மற்றும் கருப்புசாமி என்ற மகனும் உள்ளார். மஞ்சுளா தேவி திருமணமாகி அதே பகுதியில் கணவருடன் குடி யிருந்து வருகிறார்.
கருப்புசாமிக்கு திருமண மாகி முதல் மனைவி இறந்து விட்டார். வெண்ணிலா என்ற பெண்ணை 2-வ தாக திருமணம் செய்து கொண்டார். சில நாட்களில் 2-வது மனைவி அவரை பிரிந்து அவரது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் கருப்பு சாமி அவரது தாயாருடன் குடியிருந்து வருகிறார். கருப்புசாமி பணம் கேட்டதால் தனலட்சுமி தனது பெயரில் உள்ள வீட்டை 2 லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்து பணத்தை கொடுத்துள்ளார்.
அதன்பின்னரும் கருப்புசாமி வீட்டை தனது பெயருக்கு மாற்றி எழுதி தருமாறு தாயிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். தொடர்ந்து அவர் தனலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டார்.
அப்போது கருப்புசாமி திடீரென வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனலட்சுமியிடம் எனது பெயருக்கு வீட்டை மாற்றி தராவிட்டால் கத்தியால் உங்களை குத்தி விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து தனலட்சுமி பெரு ந்துறை போலீஸ் நிலை யத்தில் புகார் கொடுத்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் வழக்கு பதிவு செய்து கருப்பு சாமியை கைது செய்தார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோபி சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story






