என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆளில்லாத விமானம் மூலம் ஆய்வு
திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆளில்லாத விமானம் மூலம் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சத்தியமங்கலம்:
திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆளில்லாத விமானம் மூலம் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தமிழகம்- கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் அருகே பண்ணாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. குறுகிய வளைவுகளுடன் உள்ள இந்த மலைப்பாதை வழியாக கார், வேன், பஸ், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் என தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது.
இதனால் இந்த பகுதியில் எப்போதும் வாகன போக்கு வரத்து இருந்து கொண்டே இருக்கும். இந்த வழியாக அதிக பாரம் ஏற்றி கொண்டு வரும் சரக்கு வாகனங்கள் அடிக்கடி பழுதாகி விடு கிறது.
மேலும் ஒரு சில நேரங் களில் பாரம் தாங்காமல் வாகனங்கள் கவிழ்ந்து விடுவதும் தொடர் கதை யாக நடந்து வருகிறது. இதனால் குறுகிய இந்த மலைப்பாதையில் வாக னங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரி சல் ஏற்படுகிறது. இதனால் பல மணி நேரம் இரு மாநில வாகனங்கள் அணி வகுத்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதையடுத்து கடந்த மாதம் 10-ந் தேதி முதல் திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேர போக்கு வரத்துக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. அபாயகரமான வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுவது ஏன் என்பது குறித்தும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்தும் இந்த பகுதியில் ஆய்வு நடத்த தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் முடிவு செய்யப் பட்டது.
அதன்படி கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள தேசிய நெஞ்சாலை துறை அதிகாரிகள் நேற்று இந்த பகுதியில் ஆய்வு நடத்தினர். மேலும் பண்ணாரியம்மன் கோவில் முதல் திம்பம் மலை உச்சி வரை ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.
இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறும் போது, திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி வாகனங்கள் பழுதாகி போக்குவரத்து பாதிப்பு ஏற் படுகிறது. எனவே திம்பம் மலைப்பாதை அமைப்பு குறித்து ஆளில்லாத விமா னத்தை பயனபடுத்தி ஆய்வு நடத்தப்படுகிறது. இதன் அறிக்கை உயர் அதி காரிகளுக்கு அனுப்பி வைக் கப்படும். இதன் மூலம் திம்பம் மலைப்பாதையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண திட்டம் வகுக்கப்படும் என கூறினர்.
Next Story






