என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மதுபார்களை மூடும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடாது- ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளின் பார்களை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து 2 நீதிபதிகள் அமர்வில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. தமிழக அரசின் இந்த முடிவு மக்கள் நலனுக்கு எதிரானது.
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி குடிப்பக உரிமம் நிறைவடைந்துள்ள மற்றும் உரிமம் இல்லாத 3719 குடிப்பகங்கள் உடனடியாக மூடப்பட வேண்டும். மற்றவை 6 மாதங்களில் மூடப்பட வேண்டும். இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு வேண்டாம் என பா.ம.க. கோரிய போதிலும் தமிழக அரசு செய்திருக்கிறது.
ஒருபுறம் ரூ.4500 கோடிக்கு மதுவிலைகள் உயர்வு, மறுபுறம் புதிய மதுக்கடைகள் திறப்பு, இன்னொருபுறம் குடிப்பகங்களை மூடுவதற்கு எதிரான மேல்முறையீடு போன்ற அரசின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது மதுவணிகத்தை நம்பித் தான் இந்த அரசு செயல் படுகிறதோ? என்ற எண்ணம் ஏற்படுகிறது. இது நல்லதல்ல.
மதுபார்களை மூடும் தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீட்டை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். வருவாய்க்கான மாற்றுத் திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும். மதுக் கடைகளை படிப்படியாக மூடி தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்... ஜெயலலிதா மரண விசாரணை: ஓபிஎஸ்-க்கு சம்மன் அனுப்ப முடிவு?