search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை குடிநீர் வாரியம்
    X
    சென்னை குடிநீர் வாரியம்

    வடசென்னை பகுதியில் 4 நாட்கள் குடிநீர் சப்ளை நிறுத்தம்

    பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வருகிற 8-ந்தேதி காலை 8 மணி முதல் 11-ந்தேதி காலை 11 மணிவரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    இதனால் வடசென்னை பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மாதவரம், மணலி, திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம், பட்டேல் நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    மாற்று ஏற்பாடாக புழலில் அமைந்துள்ள 300 எம்.எல்.டி. குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு 8-ந்தேதி முதல் 11-ந் தேதி வரை குடிநீர் வழங்கப்படும். இதனால் பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம் பகுதிகளுக்கு லாரிகளில் குடிநீர் தேவைப்படுவோர் 8144930901 என்ற எண்ணிலும், மணலிக்கு 8144930902, மாதவரத்திற்கு 8144930903, வியாசர்பாடி பட்டேல் நகருக்கு தலைமை அலுவலக புகார் பிரிவு எண்கள் 044-45674567, 044-2845 1300 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×