என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்
    X
    கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்

    மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை

    வேதாரண்யத்தில் கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ள நிலையில் கடல் சீற்றமாக காணப்படுவதால் இன்று 3-&வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. 

    கடல் சீற்றமாக இருப்பதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. கடற்கரை பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் 5000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்து வீட்டில் முடங்கி உள்ளனர்.
    Next Story
    ×